உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அணைக்கு நீர் நிறுத்தம் விவசாயிகளுடன் பேச்சு

அணைக்கு நீர் நிறுத்தம் விவசாயிகளுடன் பேச்சு

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்துள்ள நல்லதங்காள் அணைக்கு, வரதமா நதியில் இருந்து தண்ணீர் வரத்தாகிறது. ஐந்து நாட்களாக பொதுபணித்துறையினர், தண்ணீரை நிறுத்தி விட்டதாக கூறி, தமி-ழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், போராட்டத்தில் ஈடுபடு-வதாக அறிவித்தனர். இது தொடர்பாக தாராபுரம் தாலுகா அலுவ-லகத்தில், தாசில்தார் திரவியம் தலைமையில் நேற்று பேச்சு-வார்த்தை நடந்தது. இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். நாளை (இன்று) அணை பகுதியில் ஆய்வு செய்து உரிய நடவ-டிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை, விவசாயிகள் ஏற்றுக்-கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ