தாம்பரம் கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு
சேலம்: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: தாம்பரம் கோவை சிறப்பு வார ரயில், அக்., 11 முதல் நவ., 29 வரை, வெள்ளிதோறும் புறப்பட்டு சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், பழநி, போத்தனுார் வழியே மறுநாள் காலை, 8:10க்கு கோவையை அடையும். மறுமார்க்க ரயில் அக்., 13 முதல், டிச., 1 வரை, ஞாயிறுதோறும் இரவு, 11:45க்கு கிளம்பி பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல் வழியே அடுத்தநாள் மதியம், 12:30 மணிக்கு தாம்பரத்தை அடையும்.