தமிழ் இலக்கிய திறன் தேர்வு:12,280 மாணவர் பங்கேற்பு
சேலம்;தமிழகத்தில் பிளஸ் 1 மாணவ, மாணவர்கள், தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக்கொள்வதற்கான திறனறி தேர்வு, சேலம் மாவட்டத்தில், 41 மையங்களில் நேற்று, நடந்தது. காலை, 10:00 முதல், மதியம், 12:00 மணி வரை நடந்தது. அனுமதிக்கப்பட்ட, 12,819 பேரில், 12,280 பேர் எழுதினர். 539 பேர் வரவில்லை. கண்காணிப்பு பணியில், 41 முதன்மை கண்காணிப்பாளர், 825 அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட கல்வி அலுவலர்கள், மையங்களில் ஆய்வு செய்தனர். இத்தேர்வில், 1,500 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாதம், 1,500 ரூபாய் வீதம், 2 ஆண்டுக்கு வழங்கப்படும் என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.