உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தமிழக ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழக ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சேலம், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க, சேலம் கிளை சார்பில், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரகுபதி தலைமை வகித்தார்.அதில், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்குதல்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு, குறைந்தபட்ச ஓய்வூதியம், 7,850 ரூபாய் வழங்குதல்; மருத்துவ படியாக, 1,000 ரூபாய் வழங்குதல்; குடும்ப பாதுகாப்பு நிதியை, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தல்; அனைத்து மூத்த குடிமக்களுக்கும், டவுன் பஸ்களில் இலவசமாக பயணிக்க அரசாணை வெளியிடுதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. செயலர் அயூப், மாநில துணைத்தலைவர் ராகவன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ