உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆசிரியர் மேம்பாடு பயிற்சி தொடக்கம்

ஆசிரியர் மேம்பாடு பயிற்சி தொடக்கம்

ஓமலுார், சேலம் பெரியார் பல்கலையில், தமிழ்த்துறை, உள்தர உத்தரவாத மையம் இணைந்து, 'உயர்கல்வியில் கற்றல், கற்பித்தல், ஆய்வியல் முறைகள்' தலைப்பில், ஆசிரியர் மேம்பாட்டு திட்ட பயிற்சியை நேற்று தொடங்கின. 5 நாள் பயிற்சிக்கு, தமிழ் துறை தலைவர் வேலாயுதன் தலைமை வகித்தார். பெரியார் பல்கலை நிர்வாக குழு உறுப்பினர் சுப்பிரமணி, பயிற்சியை தொடங்கி வைத்து, கற்பித்தல் திறனில் கோட்பாட்டு அடிப்படையில், பல்துறை சார்ந்த ஆய்வுகள் செய்ய வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தினார். சென்னை பல்கலை மொழியியல் துறை முன்னாள் பேராசிரியர் தெய்வசுந்தரம், 'தமிழும் கணினியும்'; பெரியார் பல்கலை உளவியல் துறை முதுநிலை பேராசிரியர் கதிரவன், 'உயர்கல்வியில் மன அழுத்த மேலாண்மை' தலைப்புகளில் பேசினர். பல்கலை துறை பேராசிரியர்கள், இணைவு பெற்ற கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.------------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ