கோவில் நகை திருட்டு வழக்கு: திருச்சியை சேர்ந்தவர் கைது
ஜலகண்டாபுரம், கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த, 2 பவுன் தாலியை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.ஜலகண்டாபுரம் சுந்தரம் செட்டிதெருவை சேர்ந்தவர் கண்ணன், 48. இவர் சூரப்பள்ளி-கோட்டைமேடு செல்லும் வழியில் உள்ள, புடவைகாரியம்மன் கோவில் பூசாரியாக உள்ளார். மூலஸ்தனத்தில் உள்ள அம்மன் கழுத்தில் இருந்த, 2.1 பவுன் தாலி சாத்தப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் காலையில் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, சிலையில் இருந்த தாலி திருட்டு போயிருந்தது. இது குறித்து நேற்று பூசாரி கண்ணன் ஜலகண்டாபுரம் போலீசில் புகார் அளித்தார். இவ்வழக்கில் திருச்சி மாவட்டம் துவாக்குடிமலையைச் சேர்ந்த முருகன், 50 என்ற நபரை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.