உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணம் திருட்டு

கோவில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணம் திருட்டு

மேட்டூர், கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி, உண்டியல் பணம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.மேட்டூர், கருமலைக்கூடல் அருகே புதுரெட்டியூரில் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. தர்மகர்த்தாகவாக டி.எம்.பி.,நகர் குஞ்சிரெட்டி, 77, உள்ளார். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு தர்மகர்த்தா கோவிலை பூட்டி விட்டு சென்றார். நேற்று வழக்கம்போல காலை, 6:00 மணிக்கு கோவிலுக்கு சென்றபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த ஒரு கிராம் தாலி, உண்டியலில் இருந்த, 1,000 ரூபாய், அருகிலுள்ள முனியப்பன் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு, 15 ஆயிரம் ரூபாயை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.தர்மகர்த்தா அளித்த புகார்படி, கருமலைக்கூடல் போலீசில் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை