பள்ளி மாணவியை சீண்டிய தற்காலிக ஆசிரியர் டிஸ்மிஸ்
சேலம்; பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த தற்காலிக ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், நெய்யமலையை சேர்ந்தவர் இளையகண்ணு, 37; ஏற்காட்டில் பழங்குடியின நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றினார்.இவர், பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. மாணவி தகவல்படி, சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு அதிகாரிகளுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் விசாரித்து, கொண்டலாம்பட்டி மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.போலீசார் விசாரித்து, போக்சோ சட்டத்தில் இளையகண்ணுவை, நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரை பணிநீக்கம் செய்து, சேலம் மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் சுகந்தி பரிமளம் நேற்று உத்தரவிட்டார்.