உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆணைவாரி செல்ல தொடரும் தடை

ஆணைவாரி செல்ல தொடரும் தடை

ஆத்துார்: ஆத்துார் அருகே கல்லாநத்தம் ஊராட்சி, முட்டல் கிராமம், கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ளது. முட்டல் ஏரி, ஆணைவாரி நீர்வீழ்ச்சி, வனத்துறையின் சூழல் சுற்றுலா மைய திட்டத்தில் செயல்படுகிறது. கல்வராயன்மலையில் பெய்து வரும் மழையால், நேற்று ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு அதிகளவில் தண்ணீர் வந்தது. மேலும் நீர் வீழ்ச்சி சாலைகளில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால், சுற்றுலா பயணியர் செல்வதற்கு, 3ம் நாளாக வனத்துறையினர் தடை விதித்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !