வீடியோ எடுத்ததை கேட்டவங்கி செயலாளருக்கு பளார்
நாமக்கல்:நாமக்கல் அடுத்த சின்னவேப்பநத்தம், தில்லை நகரை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 59. இவர், வேட்டாம்பாடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மதியம், 12:30 மணிக்கு, செயலாளர் மாதேஸ்வரன், வீசாணத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருடன், உரம் சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது, வேட்டாம்பாடியை சேர்ந்த சுப்ரமணி, 58, என்பவரின் மனைவி வானதி, வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். இதுகுறித்து கேட்டபோது, வீடியோ எடுப்பதை தடுப்பாயா எனக்கேட்டு, வங்கி செயலாளர் மாதேஸ்வரனை தரக்குறைவாக பேசிய சுப்ரமணி, அவரது கன்னத்தில் அடித்துள்ளார். இதுகுறித்து புகார்படி, நாமக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.