மேலும் செய்திகள்
வீட்டில் மலர்ந்த பிரம்ம கமல மலர்கள்
19-Jun-2025
ஏற்காடு, ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும், பிரம்ம கமலம் பூவானது பிரம்மாவுக்கு உகந்த பூவாக பக்தர்களால் கருதப்படுகிறது. இந்த பூ இரவு நேரத்தில் பூத்து, அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் சுருங்கி விடும். பூவின் தோற்றம் பாம்பு படம் எடுத்திருப்பது போல இருக்கும். மேலும் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டும் இச்செடியில் பூக்கள் மலரும்.ஏற்காடு பஸ் ஸ்டாண்ட் அருகில், வசித்து வரும் தனலட்சுமி என்பவரது வீட்டில் அவர் வளர்த்து வரும் ஒரு செடியில் நேற்று இரவு, 8:00 மணிக்கு, 24 பிரம்ம கமலம் பூக்கள் பூத்தது. அப்போது அப்பகுதி முழுவதும் மணம் வீசியது. இதையறிந்த பொதுமக்கள், தனலட்சுமி வீட்டுக்கு சென்று பூக்களை பார்த்து ரசித்து சென்றனர்.
19-Jun-2025