தி காவேரி பிசியோதெரபி கல்லுாரி முதலாண்டு வகுப்பு தொடக்க விழா
மேச்சேரி: மேச்சேரி தி காவேரி பிசியோதெரபி கல்லுாரியின், முதலாண்டு பிசியோதெரபி மாணவர்கள் வகுப்பு தொடக்க விழா நடந்தது. தி காவேரி கல்வி நிறுவன செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார். பிசியோதெரபி கல்லுாரி முதல்வர் முகமது நிசார் வரவேற்றார். சேலம், ஜே.எஸ்.மருத்துவமனை மருத்துவர் சுதன்ராம், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து புதிய மாணவர்களுக்கு பிசியோதெரபியின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார்.இதில் காவேரி கல்வி நிறுவன கவுரவ தலைவர் நடேசன், தலைவர் அன்பழகன், தாளாளர் ராமநாதன், துணைத்தலைவர் மதன் கார்த்திக், ஒருங்கிணைப்பாளர் ரேவதி, தலைமை செயல் அலுவலர் சண்முகநாதன், செயல் இயக்குனர் கருப்பண்ணன் ஆகியோர், மாணவர்களை வாழ்த்தினர். உதவி பேராசிரியைகள் அரவிந்தினி, கவிதா, அனைத்து முதலாம் ஆண்டு மாணவர்கள், அவர்களது பெற்றோர் பங்கேற்றனர்.