பிரதமரை முதல்வர் சந்தித்து பேசியது ஏதேனும் சமரசமாக கூட இருக்கலாம்
மேட்டூர்:அ.தி.மு.க., சார்பில், அதன் பொதுச்செயலர், இ.பி.எஸ்., பிறந்-தநாளை ஒட்டி, சேலம் மற்றும் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து, மேட்டூரில் மருத்துவ முகாம் நேற்று நடத்தப்பட்டது.இருதய பரிசோதனை முகாமை, அமைப்பு செயலர் செம்மலை தொடங்கி வைத்து பேசியதாவது:தமிழக முதல்வர், 3 ஆண்டாக டில்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார். நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் வலிய சென்று பங்கேற்றதோடு, பிரதமரை தனியே சந்தித்து பேசி-யது சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.சமீபகாலமாக தமிழகத்தில் சோதனைகள் நடக்கும் நிலையில், பிரதமரை முதல்வர் சந்தித்து பேசியது, ஏதேனும் சமரசமாக கூட இருக்கலாம் என, மக்கள் கருதுகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.கண் பரிசோதனை முகாமை, ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். ஏராளமான மக்கள், இருதயம், கண் பரிசோ-தனை செய்து கொண்டனர்.பார்வை குறைவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது.மகளிர் அணி மாவட்ட செயலர் லலிதா, மின்வாரிய அண்ணா தொழிற்சங்க மாநில தலைவர் சம்பத், ஜெ., பேரவை மாநில துணை செயலர் கலையரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்-றனர்.ஏற்பாடுகளை, மாவட்ட மருத்துவரணி துணை தலைவர் சந்திர-மோகன், சேலம் புறநகர் மாவட்ட மருத்துவரணி நிர்வாகிகள் செய்தனர்.