உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க., ஆட்சிக்கு ஏழரை சனி பிடித்துவிட்டது; அன்புமணி

தி.மு.க., ஆட்சிக்கு ஏழரை சனி பிடித்துவிட்டது; அன்புமணி

ஆத்துார், ''தி.மு.க., ஆட்சிக்கு ஏழரை சனி பிடித்து விட்டதால், மக்களே ஆட்சியை அகற்றி விடுவர்,'' என, ஆத்துாரில் நடந்த பா.ம.க., கூட்டத்தில் அன்புமணி பேசினார்.சேலம் மாவட்டம் ஆத்துாரில் நேற்றிரவு நடந்த பா.ம.க., பொதுக்கூட்டத்தில், அக்கட்சி தலைவர் அன்புமணி பேசியதாவது: நான் முதல்வராக இருந்தால், நீர் மேலாண்மைக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன்.ஆறு மாதத்திற்கு பின், பா.ம.க., ஆட்சிக்கு வந்ததும், ஆத்துார் மாவட்டமாக அறிவிக்கப்படும். வசிஷ்ட நதி சாக்கடை நதியாக மாறிவிட்டது. தி.மு.க., ஆட்சிக்கு பின், ஆறு, நீர் நிலைகளை சாகடித்து விட்டனர். வசிஷ்ட நதிக்கு காவிரி உபரி நீர் கொண்டு வருவதற்காக போராட்டம் நடத்த, என்னுடன் வாருங்கள்.கடந்த மூன்றாண்டுகளாக, வன்னியர் இட ஒதுக்கீடு அறிவிப்பதாக கூறிவிட்டு, தற்போது நான்காவது ஆண்டில் அறிவிக்க முடியாது என ஸ்டாலின் கூறுகிறார். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, 1,312 நாளுக்கு முன் தீர்ப்பு வழங்கியும், வன்னியர் சமுதாயம் மீது ஸ்டாலின் வன்மத்தில் இருந்து வருகிறார்.தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், 150 நாள் வேலை தருவதாக தி.மு.க., அறிவித்தது. ஆனால் சேலத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு, ஏழரை நாள் தான் கொடுத்துள்ளனர். தி.மு.க.,வுக்கு, ஏழரை சனி பிடித்துவிட்டது. பொய் சொல்லும் ஸ்டாலின் ஆட்சியை, மக்கள் அகற்ற உள்ளனர். இவ்வாறு அன்புமணி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி