உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கும்பாபிேஷக விழா நாளை தொடக்கம்

கும்பாபிேஷக விழா நாளை தொடக்கம்

ஓமலுார், சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே உள்ள காருவள்ளி சின்ன திருப்பதியில் உள்ள வெங்கட்ரமண சுவாமி கோவிலில், திருப்பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் நாளை காலை, 9:00 மணிக்கு மகா சுதர்சன வேள்வியுடன், கும்பாபிேஷக விழா தொடங்க உள்ளது. 28ல் கோவில் அடிவாரத்தில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வருதல், 29ல் முதல்கால வேள்வி தொடக்கம், 30ல் மூலவர், பத்மாவதி தாயாருக்கு, 81 கலச விசேஷ திருமஞ்சனம், டிச., 1 காலை, 9:30 மணிக்கு கும்பாபி ேஷகம் நடக்க உள்ளது. அன்னதானம், திருக்கல்யாணம், இரவு திருவீதி உலாவுடன், கும்பாபிேஷக விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ