உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாரியம்மன் கோவில் தேர் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

மாரியம்மன் கோவில் தேர் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை, மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாமகிரிப்பேட்டையில், வரலாற்று சிறப்புமிக்க மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி வாரம் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா மே, 7ம் தேதி நடக்கவுள்ளது. முன்னதாக கடந்த செவ்வாய்கிழமை இரவு பூச்சாட்டும் நிகழ்ச்சி நடந்தது. அம்மனுக்கு பூசாரிகள் மற்றும் பக்தர்கள் பூக்களை துாவி பண்டிகையை தொடங்கி வைத்தனர். 100 கிலோ எடையுள்ள அரளி, சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பூக்களை துாவினர்.நேற்று முன்தினம் காலை, கோவில் நிர்வாகம் சார்பில் கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. செயல் அலுவலர் செந்தில்ராஜா, டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அன்பழகன் மற்றும் பக்தர்கள் கலந்து கெண்டனர். நேற்று இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு சமுதாயத்தினர் பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து அபிேஷகம் செய்வதுடன், சுவாமியை அலங்கரித்து வீதி உலா எடுத்து செல்வர். முக்கிய நாளான மே, 7ம் தேதி காலை தீ மிதி விழா, மாலையில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் தேதி கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 10ம் தேதி மஞ்சள் நீராடல் விழாவுடன் தேர்திருவிழா முடிவடைகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ