உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீதி, வீதியாக சென்று குறை கேட்ட அமைச்சர்

வீதி, வீதியாக சென்று குறை கேட்ட அமைச்சர்

சேலம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், 'மக்கள் சந்திப்பு' திட்டத்தில், சேலம் மாநகராட்சி, 31, 32, 29வது வார்டுகளில், நேற்று வீதி வீதியாக சென்று, மக்களை சந்தித்து கலந்துரையாடினார். அத்துடன் குறைகளை கேட்டறிந்த பின், அதை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் சாலையோரம் உள்ள தேநீர் கடையில் மக்களுடன், மக்களாக டீ அருந்தினார். அப்போது ஆட்டோ டிரைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பெண்களின் கோரிக்கையை கேட்டறிந்தார். தி.மு.க.,வின், சேலம் மத்திய மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், மாநகர் செயலர் ரகுபதி, இளைஞரணி துணை அமைப்பாளர் சிவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ