மாயமான மொபைல் போன் கூரியரில் ஸ்டேஷனுக்கு வந்தது
சேலம், ;சேலம் டவுனில் ரமேஷ்குமார் என்பவர், கடந்த, 30ல் பஸ்சில் வந்துகொண்டிருந்தார். அப்போது அவரது, 25,000 ரூபாய் மதிப்பிலான மொபைல் போன் காணாமல் போனது. இதுகுறித்து ரமேஷ்குமார் புகார்படி, சேலம் டவுன் போலீசார் விசாரித்தனர். அதில் மொபைல் போனை பயன்படுத்தியது, திருச்சியை சேர்ந்த லோகநாதன் என தெரிந்தது. பின் போலீசார், அவரிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர், 'பஸ்சில் பயணம் செய்தவர், என்னிடம் காசு இல்லை என கூறி, இந்த மொபைல் போனை எனக்கு விற்றார்' என்றார்.பின் போலீசார், 'மொபைல் உரிமையாளர் காணவில்லை என புகார் கொடுத்துள்ளார்' என்றனர். இதனால் லோகநாதன், டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூரியர் மூலம் மொபைல் போனை அனுப்பி வைத்தார். பின் உரிமையாளரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது