மேலும் செய்திகள்
முதியவர் சாவு போலீஸ் விசாரணை
19-May-2025
ஆத்துார், ஆத்துார் அருகே, கல்லாநத்தம் ஏரியில் இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு, போலீசார் விசாரிக்கின்றனர்.ஆத்துார், முல்லைவாடி பகுதியை சேர்ந்தவர் கண்ணன், 75. கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே, ஓலப்பாடியில் உள்ள அவரது மகள் கவிதா வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின், முல்லைவாடிக்கு சென்றார். இந்நிலையில் நேற்று கல்லாநத்தம் பகுதியில் உள்ள ஏரியில் கண்ணன் இறந்து கிடந்தார்.ஆத்துார் ஊரக போலீசார், முதியவரின் உடலை மீட்டு ஏரியில் தவறி விழுந்து இறந்தாரா வேறு ஏதாவது காரணமா என விசாரிக்கின்றனர்.
19-May-2025