உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதல்வர் வருகையால் ஆய்வு மாளிகை பளிச்

முதல்வர் வருகையால் ஆய்வு மாளிகை பளிச்

சேலம், மேட்டூருக்கு இன்று மாலை, 5:00 மணிக்கு வரும் முதல்வர் ஸ்டாலின், நாளை காலை, 9:30 மணிக்கு, அங்குள்ள அணையில், டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைக்க உள்ளார். 11:00 மணிக்கு, சேலம், இரும்பாலை அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்க உள்ளார். மதியம், 1:00 மணிக்கு, அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகைக்கு வருவார். அங்கு மதிய உணவை முடித்துக்கொண்டு, சிறிது நேர ஓய்வுக்கு பின், ஓமலுார், காமலாபுரம் சென்று, மாலை, 5:20 மணிக்கு விமானத்தில் புறப்பட உள்ளார். இதை முன்னிட்டு, அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகை, 25 லட்சம் ரூபாய் மதிப்பில், 15 நாட்களாக சீரமைப்பு பணி நடந்தது. தற்போது ஆய்வு மாளிகை பளிச்சென மாறியுள்ளது. மேசை, நாற்காலிகள், ேஷாபா உள்ளிட்ட தளவாடங்கள் புதுப்பொலிவுக்கு மாறியுள்ளன. மின் விளக்குகளும் புதிதாக பொருத்தப்பட்டு, தார்ச்சாலை போடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் மருத்துவ கல்லுாரியில் தொடங்கி, அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகை, 10 கி.மீ.,க்கு சாலைகள், தடுப்புச்சுவர்கள் புதுப்பொலிவு பெற்றுள்ளன. கலெக்டர் அலுவலக முகப்புத்தோற்றம், உள்வளாக பகுதிகளில் வெள்ளை அடிக்கப்பட்டு பளிச்சென மாறியுள்ளது.மரக்கிளை அகற்றம்மேட்டூரில் நேற்று காலை, 9:00 மணிக்கு மின்தடை செய்யப்பட்டது. தொடர்ந்து மின் ஊழியர்கள், முதல்வர் வரும் சாலை இருபுறமும் மின் கம்பங்கள், ஒயர்கள் உள்ள பகுதிகளில், இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றினர். இப்பணி முடிந்து, மதியம், 3:00 மணிக்கு மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.கொடிகள் அணிவகுப்புஓமலுாரில் முதல்வரின், 'ரோடு ேஷா' நடக்க உள்ளதால், அவரை வரவேற்று, ஓமலுார் - மேச்சேரி சாலை, ஓமலுார் - சேலம் சாலை, விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில், சாலை இருபுறமும், தி.மு.க.,வினர், கட்சி கொடி, தோரணங்கள், பிரமாண்ட பேனர்கள் வைத்துள்ளனர். மேலும் பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.தி.மு.க., கூட்டம்இடைப்பாடியில், நகர தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. அவைத்தலைவர் மாதையன் தலைமை வகித்தார். துணை செயலர் வடிவல் தீர்மானங்களை வாசித்தார். நகர செயலர் பாஷா பேசினார். அதில், மேட்டூர் வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பாக வரவேற்பு கொடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை