உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தலை நசுங்கி வாலிபர் சாவு

தலை நசுங்கி வாலிபர் சாவு

சேலம்: சேலம் புதுபஸ் ஸ்டாண்ட் அருகே மாநகராட்சி திடலில் வாலிபர் ஒருவர் தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதைய-றிந்து நேற்று காலை, அங்கு சென்ற பள்ளப்பட்டி போலீசார், வாலிபர் சடலம் அருகே கிடந்த பையை சோதனையிட்டதில், 'டிரைவிங் லைசென்ஸ்' இருந்தது. அதில் கடலுார் மாவட்டம் சிதம்பரம் சம்பந்தக்காரர் தெருவை சேர்ந்த சரவணன், 27, என இருந்தது.இறந்தவர் அவரா என விசாரித்தபோது இல்லை என தெரியவந்-தது. இதனால் சடலம் அருகே கிடந்தது திருட்டு பை என தெரிந்-தது. மாநகராட்சி திடலில் தனியார் பஸ்கள், கால் டாக்சிகள் அதிக-ளவில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், 'போதை'யில் படுத்துக்கி-டந்த அந்த வாலிபர் மீது கார் ஏறி இறந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து அவர் யார் என விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை