பிள்ளையார் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம்
ஆத்துார்: ஆத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வெள்ளப்பிள்ளையார் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்-ளது. அக்கோவிலில், 21 ஆண்டுக்கு பின், 4 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.அதில் வடக்கு, கிழக்கு, தெற்கு என, 3 திசைகளில், ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. நாளை கும்பாபி ேஷக விழா நடக்கி-றது. இதையொட்டி கடந்த அக்., 27ல் முகூர்த்தக்கால் நடுதல், முளைப்பாரி இடுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று, அறங்காவலர் குழு தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஏராளமான பெண்கள் உள்ளிட்டோர், முளைப்பாரி, தீர்த்தக்குடம் எடுத்து, கோவிலில் இருந்து, ஆத்துார், ராணிப்பேட்டை, கடைவீதி, புதுப்பேட்டை, காமராஜர் சாலை வழியே கோவிலை அடைந்தனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.ஆர்.டி.ஓ., ஆலோசனைகும்பாபிேஷக விழா பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், அனைத்து துறை அலுவலர்க-ளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.ஆர்.டி.ஓ., தமிழ்மணி தலைமை வகித்து, ஆத்துார் பஸ் ஸ்டாண்ட், ராணிப்பேட்டை சாலை பகுதிகளில் பாதுகாப்பு வச-திகள், பக்தர்களுக்கு அத்யாவசிய வசதிகள் குறித்து ஆலோசித்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தினார்.தொடர்ந்து கோவிலுக்கு சென்று, விழா ஏற்பாடு, பாதை, 3 ராஜ-கோபுரங்கள், மூலவர் கோபுரம் உள்ளிட்டவற்றை, பார்வை-யிட்டார்.