தெருவில் நிறுத்தப்பட்ட பைக் திருட்டு
சேலம், தெருவில் நிறுத்தப்பட்ட பைக் திருட்டு போனது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.சேலம் பொன்னம்மாபேட்டை, செங்கல் அணை ரோடு பகுதியை சேர்ந்தவர் நிர்மல்குமார், 28, இவர் வெள்ளக்கல்பட்டியில், 'டர்ப்' விளையாட்டு மைதானம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மைதானம் முன், தனது பல்சர் பைக்கை நிறுத்திவிட்டு அறையில் துாங்கியுள்ளார். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு பார்த்த போது, பைக்கை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கருப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.