உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முருகன் கோவில்களில் திருக்கல்யாண வைபவம்

முருகன் கோவில்களில் திருக்கல்யாண வைபவம்

சேலம், நவ. 9-சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் முருகப்பெருமானுக்கு கந்த சஷ்டி உற்சவம் கடந்த, 2ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடந்தது. சஷ்டியின் நிறைவு நாளான நேற்று திருக்கல்யாண வைபவம் நடந்தது. அதிகாலை முதல் கணபதி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. வள்ளி தெய்வானை சமேத முருக பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.அன்னதானம்கல்யாண சீர்வரிசைகளை, பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். முருகப்பெருமானுக்கு கங்கண கயிறு கட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து வேதங்கள் முழங்க மங்கல வாத்தியம் இசைக்க மாங்கல்யத்தை பக்தர்கள் முன்னிலையில் காட்டி பின் வள்ளி தெய்வானை சமேத முருகன் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். பின் அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் மாநகரில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில் முருகன் திருக்கல்யாணம் நடந்தது.தங்கத்தேர்ஆத்துார் அருகே வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில் பாலசுப்ரமணியர் மாப்பிள்ளை அலங்காரத்தில் திருவீதி உலா வந்தார். தொடர்ந்து தெய்வானையை திருக்கல்யாணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இரவு தங்கத்தேரில் முத்துமலை முருகனை, தெய்வானை, வள்ளியுடன் கோவிலை சுற்றி பக்தர்கள் இழுத்து வந்தனர். ஒளிபரப்புதாரமங்கலம் சுப்ரமணியர் கோவிலில் உற்சவர் சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை சுவாமிக்கு, யாக வேள்விகள் செய்து திருக்கல்யாணம் நடந்தது. கோவில் வளாகம் சிறிதாக இருந்ததால், அதற்கு முன் சாலையில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். அவர்கள் வசதிக்கு இரு இடங்களில், 'மானிட்டர்' வைத்து திருக்கல்யாணத்தை ஒளிபரப்பு செய்தனர். அதில் வைபவத்தை பக்தர்கள் கண்டுகளித்தனர். இடைப்பாடி, கவுண்டம்பட்டி சுப்ரமணியர், இளம்பிள்ளை பாலசுப்ரமணியர், காளிப்பட்டி கந்தசாமி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் திருக்கல்யாணம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ