மேலும் செய்திகள்
நீதிமன்றம் பிடிவாரன்ட் வாலிபர் சுற்றிவளைப்பு
07-Aug-2025
சேலம், தலைமறைவான குற்றவாளிகள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.சேலம் கிச்சிப்பாளையம், கஸ்துாரிபாய் தெருவை சேர்ந்த சுரேஷ்ராஜா, 34, என்பவர், 2011ல் அன்னதானப்பட்டி பகுதியில், அடிதடி உள்ளிட்ட குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்த சுரேஷ்ராஜா, வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார் அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.இதே போல சேலம் தாதகாப்பட்டி பொம்மன்ன செட்டி காட்டை சேர்ந்த பூபதி, 37, கடந்த 2021ல் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். ஜாமினில் வெளியே வந்த பூபதி, வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. தாதகாப்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த அவரை, அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.இதே போல நெத்திமேடு, மணியனுார், காத்தாயம்மாள் தெருவை சேர்ந்த முருகன், 43, என்பவர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால், நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து, மணியனுாரில் பதுங்கி இருந்த முருகனை நேற்று அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
07-Aug-2025