மேலும் செய்திகள்
பெயிண்டரை தாக்கிய இருவர் கைது
23-Sep-2024
காடையாம்பட்டி: காடையாம்பட்டி தாலுகா, நைனாகாட்டை சேர்ந்தவர் விஜி, 45, விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு, உறவினர் வடிவேல் வீட்டின் முன் தனது டிராக்டரை நிறுத்தியுள்ளார். 8:00 மணியளவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்த போது, மூன்று பேர் டிராக்டரில் இருந்த இரும்பு ராடுகள், ஜாக்கி ஆகியவற்றை திருடிக்கொண்டு, பல்சர் பைக்கில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்து, நைனாகாட்டை சேர்ந்த அசோகன், 31, சேட்டு, 42, வஜ்ரவேல், 25, ஆகிய மூவரை கைது செய்து, பொருட்களை மீட்டனர்.
23-Sep-2024