உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.2 லட்சம் கடனுக்காக மூவர் தற்கொலை முயற்சி

ரூ.2 லட்சம் கடனுக்காக மூவர் தற்கொலை முயற்சி

ஓமலுார் : சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, கொங்காரப்பட்டியை சேர்ந்த யேசு மனைவி ரீட்டா மேரி, 40. இவரது மகன் பிரகாஷ், 25, மகள் ப்ரியா, 20. இவர்கள் வீடு, நிலங்களை விற்று, 20 ஆண்டுக்கு முன், திருச்செங்கோடில் குடியேறினர். ஆறு ஆண்டுக்கு முன் யேசு இறந்துவிட்டார்.நேற்று காலை மூவரும் சொந்த ஊரான கொங்காரப்பட்டி வந்து, அங்குள்ள சர்ச்சில் வழிபட்டனர். பின், அதன் அருகே மயங்கிய நிலையில் கிடந்தனர். மூவரும் மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், 'கணவர் இறந்த பின், குடும்பத்தினர், 2 லட்சம் ரூபாய் கடன் பிரச்னையில் சிக்கியுள்ளனர். கடன்காரர்கள் பணத்தை கேட்டு வந்த நிலையில், மூவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ