மேலும் செய்திகள்
பெங்களூரு சிறுவர்கள் மீட்பு
28-Oct-2024
சினிமா பார்த்து விட்டு துாங்கிய மூன்றுசிறுவர்கள் பெற்றோரிடம் ஒப்படைப்புஇடைப்பாடி, நவ. 26-வீட்டிலிருந்து வெளியேறி, சினிமா பார்த்து விட்டு தியேட்டர் வாசலில் துாங்கிய மூன்று சிறுவர்களை போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்த, 14, 13 வயது சிறுவன், வெப்படையை சேர்ந்த, 10 வயது சிறுவன் ஆகிய மூன்று பேர் பள்ளிக்கு செல்லாமல், பெற்றோர்களின் தொழிலான தெருக்களில் பேனா விற்கும் தொழிலை செய்து வந்தனர். இவர்கள் கடந்த, 21ல் தாரமங்கலத்தில் பேனா விற்றுள்ளனர். பின்னர், பெற்றோரிடம் சொல்லாமல் மூவரும் பல ஊர்களுக்கு சென்று சினிமா பார்த்துள்ளனர்.நேற்று முன்தினம் இரவு இடைப்பாடி வந்த மூன்று சிறுவர்களும், ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு மேட்டுத்தெரு பகுதியில் உள்ள தியேட்டரில் சினிமா பார்த்துவிட்டு, வெளியே உள்ள கடையில் படுத்து துாங்கியுள்ளனர். நேற்று காலை, 8:30 மணி வரை மூவரும் துாங்கி கொண்டிருந்தனர். அவர்களின் சட்டை பையில், ஹான்ஸ் பாக்கெட்கள் இருந்துள்ளது. மூன்று சிறுவர்களும் மயங்கி விழுந்ததாக நினைத்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், சிறுவர்களை எழுப்பி இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின், அவர்களது பெற்றோர்களை வரவழைத்து ஒப்படைத்தனர்.
28-Oct-2024