டீ கடையில் காஸ் கசிவில் தீ விபத்து 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
ஆத்துார், டிச. 24-ஆத்துார் அருகே, டீ கடையில் காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதில், தீ விபத்து ஏற்பட்டது.ஆத்துார் அருகே, நரசிங்கபுரம் நகராட்சி, 14வது வார்டு குறிஞ்சி நகர் பகுதியில் முகேஷ்குமார், 40, ஷாம்மோசஸ், 42, ஆகியோர் டீ கடை நடத்தி வருகின்றனர். நேற்று காலை, 6:00 மணியளவில், கடையை திறந்து டீ, காபி போடும் பணியில் முகேஷ்குமார், ஷாம்மோசஸ், பணியாளர் அங்கம்மாள் ஆகியோர் ஈடுபட்டனர். 6:30 மணியளவில் காஸ் சிலிண்டரை பற்ற வைக்கும்போது, காஸ் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது.தீயின் தாக்கம் வேகமானதால், ஆத்துார் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, தீ பரவாமல் அணைத்தனர். காஸ் சிலிண்டரையும் மீட்டனர். இதில், டீ கடைக்குள் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. மூவரும் வெளியே வந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.தீ விபத்து குறித்து, ஆத்துார் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.