உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாகன டயர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் கோரிக்கை

வாகன டயர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் கோரிக்கை

நாமக்கல், வெளிநாட்டு வாகன டயர்கள் இறக்குமதிக்கு, இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என, டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நாமக்கல் தாலுகா டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம், தலைவர் வரதராஜ் தலைமையில் நடந்தது. மாநில தலைவர் ராஜ்குமார் கோரிக்கைகள் குறித்து பேசினார். கூட்டத்தில், நாமக்கல் மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க, அவுட்டர் ரிங் ரோடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.தரமற்ற சீன டயர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு டயர்கள் இறக்குமதிக்கு, இந்தியாவில் தடை விதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், உள்நாட்டில் டயர் உற்பத்திக்கு பாதுகாப்பாக அமையும். டயர் ரீட்ரேடிங் தொழில் வளர்ச்சிக்கு, வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் உதவி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் மல்லீஸ்வரன், துணைத்தலைவர்கள் லோகேந்திரன், தர்மலிங்கம், இணை செயலாளர்கள் வெங்கடேஷ், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ