உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நல்லுறவு கைப்பந்து போட்டி திருப்பூர் குமரன் முதலிடம்

நல்லுறவு கைப்பந்து போட்டி திருப்பூர் குமரன் முதலிடம்

சேலம்: சேலம் மாநகர போலீஸ் - மக்கள் நல்லுறவு கைப்பந்து போட்டி, செவ்வாய்ப்பேட்டையில், கடந்த இரு நாட்களாக நடந்தது. ஆண்கள் பிரிவில், 22 அணிகள், பெண்கள் பிரிவில், 10 அணிகள் பங்கேற்றன. அதன் முடிவில் ஆண்கள் பிரிவில் கன்-னங்குறிச்சி திருப்பூர் குமரன் கைப்பந்து குழு, பூலாவரி வி.எஸ்.ஏ., அணி, பூலாவரி செழியன் அணி, ஏ.என்.மங்கலம் சென்மேரீஸ் உயர்நிலைப்பள்ளி அணிகள், முதல் நான்கு இடங்-களை பிடித்தன.அதேபோல் பெண்கள் பிரிவில் சக்தி கைலாஷ் மகளிர் கல்லுாரி, ஆத்துார் பாரதியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி, ஏ.என்.மங்கலம் சென்மேரீஸ் உயர்நிலைப்பள்ளி, அழகாபுரம் ஹோலி ஏஞ்சல் பள்ளி அணிகள், முதல் நான்கு இடங்களை பெற்றன. அந்த அணிகளுக்கு பரிசளிப்பு விழா, நேற்று மாலை நடந்தது.மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமை வகித்து, வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பைகளை வழங்-கினார். துணை கமிஷனர்கள் வேல்முருகன், கீதா, சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார், செயலர் சண்மு-கவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !