உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மழையை ரசித்தபடி சுற்றுலா பயணியர் படகு சவாரி

மழையை ரசித்தபடி சுற்றுலா பயணியர் படகு சவாரி

ஏற்காடு: தீபாவளியை தொடர்ந்து தொடர் விடுமுறையால், ஏற்காட்டுக்கு நேற்று ஏராளமான சுற்றுலாப்பயணியர் வந்திருந்தனர். குறிப்பாக படகு இல்லத்தில் பயணச்சீட்டு வாங்கி காத்திருந்து சவாரி செய்து மகிழ்ந்தனர். சூழல் சுற்றுலா பூங்காவில் சாகச விளையாட்-டுகள், ஊஞ்சலில் விளையாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் மதியம், 12:30 மணிக்கு மழை பெய்தது. மழை விட்டு விட்டு, 4:00 மணி வரை பெய்தது. ஆனால் மழையை பொருட்படுத்-தாமல் ஏராளமானோர், படகு சவாரி செய்து மழையையும் ரசித்-தனர். மேலும் விட்டு விட்டு பெய்த மழையால் ஏற்காடு, 'குளுகு-ளு'வென மாறியது. 21,745 பேர் ரசிப்புதீபாவளி முடிந்த நிலையில், கடந்த இரு நாட்கள் விடுமுறை என்-பதால் மேட்டூர் அணை பூங்காவை பார்வையிட சுற்றுலா பய-ணியர் ஏராளமானோர் வந்தனர். அதன்படி நேற்று முன்தினம், 10,618 பேர், நேற்று, 11,127 பேர் என, இரு நாட்களில், 21,745 பேர் பார்வையிட்டனர். அதேபோல் பவளவிழா கோபுரத்தை நேற்று முன்தினம், 1,327 பேர், நேற்று, 1,455 பேர் என, 2,782 பேர் பார்வையிட்டனர்.மேலும் சுற்றுலா பயணியர் ஏராளமானோர், அருகே உள்ள காவி-ரியாற்றில் குளித்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை