சுற்றுலா வேனை ஓட்டிவந்த டிரைவர் பலி; பயணியர் தப்பினர்
மேட்டூர்: திருவள்ளூர் மாவட்டம் சீரப்பட்டு, ஜே.பி., நகரை சேர்ந்த டிரைவர் முருகன், 40. இவரது மனைவி ராணி, 35. கடந்த, 13ல் சென்னையில் இருந்து கார்த்திக் என்பவரது, 'டிராவல்ஸ்' வாக-னத்தில், பயணியரை ஏற்றிக்கொண்டு, முருகன், கோவை ஈஷா யோகா மையத்துக்கு சென்றார். அங்கு சுற்றி பார்த்த பயணியர், பின் ஒகேனக்கல்லுக்கு புறப்பட்டனர்.நேற்று மதியம், 1:30 மணிக்கு, மேட்டூர் அடுத்த சின்னமேட்டூர் வழியே வேனில் சென்றுகொண்டிருந்தபோது, முருகனுக்கு நெஞ்-சுவலி ஏற்பட்டது. உடனே அருகிலுள்ள பெட்ரோல் பங்கில், வேனை நிறுத்தியதால் பயணியர் தப்பினர். இந்நிலையில் வலிப்பு ஏற்பட்டு முருகன் ரத்த வாந்தி எடுத்தார். உடனே பய-ணியர் அவரை மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்-பிய நிலையில் வழியில் உயிரிழந்தார். கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.