உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணை மேல் பூங்காவில் சுற்றுலா பயணியருக்கு தடை

மேட்டூர் அணை மேல் பூங்காவில் சுற்றுலா பயணியருக்கு தடை

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அடிவாரம், 28 ஏக்கரில் சுற்றுலா பயணியர் பார்வையிடும் பூங்கா, 5 ஏக்கரில், 5 கண் மதகு பாலத்தை கடந்து செல்லும் மேல் பூங்கா உள்ளது. இரு நாட்களுக்கு முன், மேல் பூங்காவில், 5 கண் மதகு பகுதியை பராமரிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டு, அதற்கு செல்லும் மதகு பால கதவு பூட்டப்பட்டுள்ளது.பராமரிப்பு பணி முடிந்து, 3 மாதங்களுக்கு பின், மேல் பூங்கா திறக்கப்படும் என, மேட்டூர் அணை நீர்வளத்துறை பொறியாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ