பூங்காவை ரசித்த சுற்றுலா பயணியர்; 5 நாட்களில் ரூ.5 லட்சம் வசூல்
மேட்டூர்: பொங்கல் பண்டிகை விடுமுறையால், மேட்டூர் அணை பூங்காவை தினமும் ஏராளமானோர் பார்வையிட்டு ரசித்தனர். அதன்படி கடந்த, 15ல், 7,483 பேர், 16ல், 6,676 பேர், 17ல், 7,274 பேர், நேற்று முன்தினம், 5,405 பேர் பார்வையிட்டனர். ஆனால் நேற்று, 4,596 பேர் என, சுற்றுலா பயணியர் எண்ணிக்கை சரிந்தது. 5 நாட்களில் சுற்றுலா பயணியர், அவர்களது மொபைல் கட்டணமாக, நீர்வளத்துறைக்கு, 4.99 லட்சம் ரூபாய் வசூலானது. அதேநேரம் பூலாம்பட்டி காவிரி ஆற்றில் உள்ள படகு துறையில், ஏராளமானோர் படகில் பயணித்து மகிழ்ந்தனர்.பனிமூட்டம்
ஏற்காட்டில் நேற்று காலை முதலே பனிமூட்டம் நிலவியது. வாகன ஓட்டிகள், சாலையே சரியாக தெரியாத நிலையில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி, ஊர்ந்தபடியே சென்றனர். பனி மூட்டம் மட்டுமின்றி சாரல் மழை பெய்ததோடு கடுங்குளிர் காணப்பட்டது. இதனால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இருப்பினும் படகு இல்லம் சென்ற சுற்றுலா பயணியர், படகில் சவாரி செய்தபடியே பனிமூட்டத்தை ரசித்தனர். மேலும் பொங்கல் விடுமுறை முடிந்ததால் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை வெகுவாக சரிந்திருந்தது.