உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மே தினத்தை முன்னிட்டுதொழிற்சங்கங்கள் பேரணி

மே தினத்தை முன்னிட்டுதொழிற்சங்கங்கள் பேரணி

சேலம்:மே தினத்தை முன்னிட்டு, சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில், சேலம் தொங்கும் பூங்கா அருகே நேற்று பேரணி நடந்தது.ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலர் சம்பத் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். கோட்டை மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.தொடர்ந்து கோட்டை மைதானத்தில் மே தின பொதுக்கூட்டம் நடந்தது. தோட்ட தொழிலாளர்ஏற்காட்டில் உள்ள நீலமலை தோட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் பேரணி நடந்தது. பொதுச்செயலர் நல்லமுத்து தலைமை வகித்தார். ஒண்டிக்கடை ரவுண்டானாவில் தொடங்கிய பேரணி, பஸ் ஸ்டாண்ட் அருகே சங்க அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் ஏற்காடு மலைக்கிராமங்களில் உள்ள காபி தோட்டத்தில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அதேபோல் ஆத்துாரில், இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் சார்பில் பேரணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ