உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு பஸ் டயர் வெடித்ததால் போக்குவரத்து பாதிப்பு

அரசு பஸ் டயர் வெடித்ததால் போக்குவரத்து பாதிப்பு

ஆத்துார், சேலம் கோட்ட அரசு பஸ், நேற்று திட்டக்குடியில் இருந்து, ஆத்துார் நோக்கி மதியம், 12:40 மணியளவில் வந்தபோது, அரசு மருத்துவமனை எதிரே முன் பக்க டயர் வெடித்து, சிறிது துாரம் சென்றது. பஸ் டிரைவர் சாமர்த்தியமாக, பஸ்சை நிறுத்தினார். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பஸ் நிறுத்தப்பட்டதால் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பஸ்சில் இருந்த, 20க்கும் மேற்பட்ட பயணிகள், வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். பஸ் டிரைவர், கண்டக்டர், அப்பகுதியினர் உதவியுடன், வெடித்த டயரை கழற்றிவிட்டு, பஸ்சில் இருந்த, மாற்று டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.மாற்று டயர் பொருத்திய பின் மதியம், 1:30 மணியளவில் பஸ்சை எடுத்துச் சென்றனர். இதனால், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அரை மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை