உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பழுதாகி நின்ற பஸ்சால் போக்குவரத்து நெரிசல்

பழுதாகி நின்ற பஸ்சால் போக்குவரத்து நெரிசல்

அயோத்தியாப்பட்டணம் சேலத்தில் இருந்து வேலுாருக்கு இயக்கப்படும் அரசு பஸ், நேற்று மாலை, 4:00 மணிக்கு, அயோத்தியாப்பட்டணம் பஸ் ஸ்டாப் அருகே, ரயில்வே கேட் முன், அரூர் நெடுஞ்சாலை நடுவே பழுதாகி நின்றது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள், சாலையில் காத்திருந்து சிரமத்துக்கு ஆளாகினர். சிலர் குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்பட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், பஸ் டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு ஆம்புலன்ஸூம் வந்து சிக்கியது. பின் மெக்கானிக் வரவழைக்கப்பட்டு, மாலை, 5:15 மணிக்கு, அரசு பஸ்சில் கோளாறு சரிசெய்யப்பட்டது. ஆனால் பயணியர், வேறு பஸ்சை பிடித்துச்சென்றனர். பின் அந்த பஸ், மீண்டும் சேலத்துக்கே திரும்பிச்சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை