போக்குவரத்து தொழிலாளர் 2ம் நாளாக போராட்டம்
சேலம், சேலம், மெய்யனுார் அரசு போக்குவரத்து பணிமனை முன், சி.ஐ.டி.யு., போக்குவரத்து தொழிலாளர்கள், அரசு விரைவு போக்குவரத்து தொழிலாளர்கள், ஓய்வூதிய தொழிலாளர்கள் சார்பில், நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. அதில், 15வது ஊதிய ஒப்பந்த நிலுவைகளை உடனே வழங்குதல்; 25 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய பலன்களை உடனே வழங்குவதோடு, ஓய்வுபெறும் நாளில் பணப்பலன்களை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். 2ம் நாளாக நேற்றும், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.