உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 660 கோவிலுக்கு அறங்காவலர் சேலம் மாவட்டத்தில் நியமனம்

660 கோவிலுக்கு அறங்காவலர் சேலம் மாவட்டத்தில் நியமனம்

சேலம்; சேலம் மாவட்டத்தில், அறநிலையத்துறை சார்பில், 660 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 238 கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம் செய்யும் பணி நடக்கிறது. சேலம் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கோட்டை பெரிய மாரியம்மன், கோட்டை அழகிரிநாதர் மற்றும் காருவள்ளி பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் அறங்காவலர்களின் பதவிக்காலம் ஆக., 8ல் முடிவடைந்தது. புதிய அறங்காவலர்கள் நியமனம் குறித்த விண்ணப்பங்கள், அந்தந்த கோவில்களில் பெறப்பட்டன. இது குறித்து, அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜா கூறுகையில், “மாவட்டத்தில், அறநிலையத்துறை சார்பில், 1,330 கோவில்கள் உள்ளன. இவற்றில், 432 கோவில்களில், அறங்காவலர் நியமனம் தொடர்பாக நீதிமன்ற வழக்கு உள்ளது. மீதமுள்ள, 898 கோவில்களில், 660ல் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். “மேலும், 238 கோவில்களில் அறங்காவலர் நியமனம் தொடர்பாக, விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை