உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆத்துார் கூட்டுறவு சங்கத்தில் ரூ.23 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

ஆத்துார் கூட்டுறவு சங்கத்தில் ரூ.23 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

ஆத்துார், ஆத்துார் வேளாண் கூட்டுறவு சங்கத்தில், 23 லட்சம் ரூபாய்க்கு மஞ்சள் வர்த்தகம் நடந்தது.ஆத்துார் வேளாண் கூட்டுறவு சங்கத்தில், நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. ஆத்துார், தலைவாசல், வீரகனுார், கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதி மட்டுமின்றி, கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், பெரம்பலுார் பகுதியில் இருந்து, 50 விவசாயிகள், 163.52 குவிண்டால் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.விரலி ரகம் மஞ்சள் குவின்டால், 12 ஆயிரத்து, 489 முதல், 15 ஆயிரத்து, 899 ரூபாய்; உருண்டை ரகம் குவின்டால், 11 ஆயிரத்து, 469 முதல், 13 ஆயிரத்து, 899 ரூபாய்; பனங்காலி (தாய் மஞ்சள்) குவின்டால், 23 ஆயிரத்து, 689 முதல், 27 ஆயிரத்து, 02 ரூபாய் என, 163.52 குவின்டால் மஞ்சள், 23 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை