மேலும் செய்திகள்
ரூ.1 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்
30-Aug-2025
ஆத்துார், ஆத்துார் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், 752 மூட்டை மஞ்சளை கொண்டு வந்தனர். வியாபாரிகள், தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயித்தனர். குவிண்டால் விரலி ரகம், 10,869 முதல், 13,829 ரூபாய்; உருண்டை ரகம், 10,369 முதல், 12,223 ரூபாய்; பனங்காலி(தாய் மஞ்சள்), 23,589 முதல், 28,329 ரூபாய் வரை விலைபோனது. 413.97 குவிண்டால் மஞ்சள் மூலம், 51 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், குவிண்டாலுக்கு விரலி ரகம், 240 ரூபாய், உருண்டை மற்றும் பனங்காலி ரகம், 100 ரூபாய் விலை குறைந்தது.
30-Aug-2025