உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உலக பட்டினி தினத்தில் த.வெ.க.,வினர் அன்னதானம்

உலக பட்டினி தினத்தில் த.வெ.க.,வினர் அன்னதானம்

ஆத்துார், உலக பட்டினி தினத்தையொட்டி, த.வெ.க.,வின், சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில், ஆத்துார், நரசிங்கபுரம் நகர், கிராம பகுதிகளில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட செயலர் வெங்கடேசன் தலைமை வகித்தார். அதில் கட்சியினர், ஏழைகள், ஆதரவற்றோர் உள்ளிட்ட மக்களுக்கு உணவுகளை வழங்கினர். மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.அதேபோல் ஓமலுாரில் நகர செயலர் மணி தலைமையில் நடந்த விழாவில் சேலம் வடக்கு மாவட்ட செயலர் செந்தில், அன்னதானத்தை தொடங்கிவைத்தார். தொடர்ந்து பஸ் பயணியர், சாலையோர வியாபாரிகள், மக்கள், கட்சியினர் என, 400 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகர இணை செயலர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை