மேலும் செய்திகள்
குட்கா பறிமுதல் இருவர் கைது
01-Feb-2026
சேலம்: சேலம் கன்னங்குறிச்சி போலீசாருக்கு, கோரிமேடு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று கன்-னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் சுபாஸ் தலைமையில் போலசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோரிமேடு பகுதியில் இருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அவர்க-ளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் கன்னங்குறிச்சி, பகுதியை சேர்ந்த கார்த்திக்ராஜா, 23, அழகாபுரம் ஏ.டி.சி. நகரை சேர்ந்த சவுந்தரபாண்டியன், 27, என்பது தெரிய-வந்தது. அவர்களிடம் இருந்து, 20 போதை மாத்திரைகளை பறி-முதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.
01-Feb-2026