உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏரியில் மூழ்கி இருவர் பலி

ஏரியில் மூழ்கி இருவர் பலி

வீரபாண்டி : சேலம் மாவட்டம் காகாபாளையம் அருகே ராக்கிப்பட்டி, அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் சங்கர், 40; கட்டட தொழிலாளி. இவரது மனைவி கல்பனா, 35. இவர்களது மூத்த மகள் ஸ்ரீகவி, 14. இவர், 9ம் வகுப்பு படித்தார். அதே பகுதியைச் சேர்ந்த, கட்டட தொழிலாளி ராஜா, 39. இவரது மனைவி மல்லிகா, 36. இவர்களது மகன் பிரதீப், 9. இவர், 4ம் வகுப்பு படித்தார்.உறவினர்களான ஸ்ரீகவி, பிரதீப் ஆகியோர், மாட்டுப்பொங்கலையொட்டி நேற்று தாத்தா ராஜேந்திரன், 73, என்பவருடன், அருகே உள்ள ராக்கிப்பட்டி, கொல்லங்குட்டை ஏரிக்கு, ஆட்டை குளிப்பாட்ட சென்றனர். அப்போது, நீரில் மூழ்கி இருவரும் பலியாகினர். அங்கிருந்தவர்கள் ஏரியில் தேடியபோது மாணவி, மாணவரை சடலமாகவே மீட்க முடிந்தது. ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !