உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுவன் உள்பட 2 பேர் படுகாயம் நாய்களை பிடிக்க வலியுறுத்தல்

சிறுவன் உள்பட 2 பேர் படுகாயம் நாய்களை பிடிக்க வலியுறுத்தல்

சேலம், சேலம், கொண்டலாம்பட்டியில், 4 வயது சிறுவன் நேற்று முன்தினம் விளையாடிக்கொண்டிருந்தபோது, தெரு நாய் கடிக்க முயன்றது.பயந்து சிறுவன் ஓடியபோது, நாய் விரட்டிச்சென்று கடித்துவிட்டது. படுகாயம் அடைந்த சிறுவனை, பெற்றோர் மீட்டு சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின் நாய்களை பிடிக்கக்கோரி, பெற்றோர், கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். உடனே ஊழியர்கள், நாயை பிடித்து சென்றனர்.இந்நிலையில் அதே பகுதியில், 40 வயது பெண்ணையும் ஒரு நாய் கடிக்க, அவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனால் தாதகாப்பட்டி, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதி களிலும், நாய்களை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை