மதுரையில் உண்ணாவிரதம் வெற்றி இ.பி.எஸ்.,சை சந்தித்த உதயகுமார்
சேலம்: தி.மு.க., ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் கலாசாரம், முல்லை பெரியாறு உரிமையை காப்பாற்ற தவறியது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில், அ.தி.மு.க., அம்மா பேரவை சார்பில், கடந்த, 9ல் உண்ணாவிரதம் நடந்தது.இது வெற்றிகரமாக நடந்ததால், முன்னாள் அமைச்சரான, எதிர்க்-கட்சி துணைத்தலைவர் உதயகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சேலம் நெடுஞ்சாலை நகரில், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்.,சை நேற்று சந்தித்தனர். அப்போது பேரவை நிர்வா-கிகள், இ.பி.எஸ்.,க்கு வெற்றிலை மாலை அணிவித்து, வெள்ளி வாள் வழங்கி வாழ்த்து பெற்றனர். இதில் அம்மா பேரவை மாநில நிர்வாகிகள் துரை, தனராஜ், வெற்றிவேல், சதன் பிரபாகர், எம்.எல்.ஏ., ஜெயக்குமார் பங்கேற்றனர்.மருத்துவ மாணவி வாழ்த்துஅதேபோல் அதிகாரிப்பட்டியை சேர்ந்த, உடையாப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி சுவாதி, 'நீட்' தேர்வில், 589 மதிப்பெண் பெற்றார். அவருக்கு சென்னை மருத்துவ கல்லுா-ரியில், 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் படிக்க வாய்ப்பு கிடைத்-தது. இதனால், இ.பி.எஸ்.,சை அவரது இல்லத்தில் சந்தித்த மாணவி, உள் இட ஒதுக்கீடு ஏற்படுத்திக்கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.