உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்: 444 பேர் கைது

தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்: 444 பேர் கைது

சேலம் : சேலம் மாவட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பில் சேலம், கோட்டை, ஸ்டேட் பேங்க் அருகே சாலை மறியல் போராட்டம் நேற்று நடந்தது. சி.ஐ.டி.யு., சங்க மாநில துணை தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார்.அதில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உறுதிப்படுத்தல்; மோட்டார் தொழிலாளர்கள் பாதிக்கும் சட்டத்தை கைவிடுதல்; விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தல்; பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் கொள்கைகளை கைவிடுதல்; அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் நலவாரியம் உருவாக்கி, சமூக, சட்ட பாதுகாப்பை அமல்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.இதில், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் பரமசிவம், ட.பி.எப்., மாவட்ட கவுன்சில் தலைவர் பழனியப்பன், ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.யு.டி.யு.சி., எஸ்.கே.எம்., உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர். ஆனால் சாலை மறியலில் ஈடுபட்ட, 444 பேரை போலீசார் கைது செய்தனர்.10,000 ஆட்டோக்கள் நிறுத்தம்அதேபோல் சேலத்தில், 10,000க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை இயக்காமல், அதன் டிரைவர்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டனர். வேறு வழியின்றி, பெற்றோர், அவரவர் குழந்தைகளை, வாகனங்களில் கொண்டு சென்று, பள்ளியில் விட்டனர். மேலும் ஆட்டோக்களை பயன்படுத்துவோர் சிரமத்துக்கு ஆளாகினர்.

மேட்டூர்

அதேபோல் மேட்டூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., ெஹச்.எம்.எஸ்., உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர், ஸ்டேட் வங்கிக்கு பேரணியாக சென்றனர். வங்கி நுழைவாயில் முன், சி.ஐ.டி.யு., மாவட்ட துணை தலைவர் கருப்பண்ணன் தலைமையில், மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோஷம் எழுப்பினர். பொருளாளர் இளங்கோ, ஏ.ஐ.டி.யு.சி., ராஜேந்திரன், ஐ.என்.டி.யு.சி., பாலசுப்ரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை