உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / யுனைடெட் கேர் கிளினிக்குக்கு விருது

யுனைடெட் கேர் கிளினிக்குக்கு விருது

சேலம் :சேலம் யுனைடெட் கேர் ஆக்குபேஷனல் தெரபி அண்ட் ஸ்பீச் தெரபி கிளினிக்குக்கு, சென்னையில் நடந்த விழாவில், குழந்தை மேம்பாடு மற்றும் மறுவாழ்வுக்கான சிறந்த பங்களிப்புகளை அங்கீகரித்து, 3 விருதுகள் வழங்கப்பட்டன. கிளினிக்கின் தலைவர்களும் தனித்தனியே கவுரவிக்கப்பட்டனர்.குழந்தை ஆக்குபேசனல் தெரபி சிகிச்சையில் முன்னோடி பணிக்காக அங்கீகரிக்கப்பட்ட மூத்த தொழில் சிகிச்சையாளர், நிறுவனர் கார்த்திகேயன் செல்வராஜ், குழந்தை தொடர்பு மேம்பாட்டில் சிறந்து விளங்கியதற்கு ஜெயலட்சுமி, குழந்தை மையப்படுத்தப்பட்ட பராமரிப்பை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக, மூத்த சிகிச்சையாளர் லட்சுமி விஜய் கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ