உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நா.த.க., நிர்வாகிகள் விலகல்; நடிப்பவனுக்கு பதவி என புகார்

நா.த.க., நிர்வாகிகள் விலகல்; நடிப்பவனுக்கு பதவி என புகார்

சேலம்: நாம் தமிழர் கட்சியின், சேலம் மாவட்ட, மேச்சேரி ஒன்றிய செயலர் கார்த்திக், 43, கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக, முகநுாலில் பதிவிட்டுள்ளார்.இதுகுறித்து கார்த்திக் கூறுகையில்,'' கட்சிக்காக, 10 ஆண்டுகளாக உழைத்தேன். நிறைய செலவு செய்துள்ளேன். ஆனால் உழைப்புக்கும், உழைப்பவனுக்கும் மரியாதை, முன்னுரிமை இல்லை. நடிப்பவனுக்கு பதவி, பொறுப்பு வழங்குவது, தலைமை மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதனால், கட்சியில் இருந்து விலகுகிறேன்,'' என்றார்.அதேபோல, மேட்டூர் தொகுதி துணைத்தலைவர் ரகு, 37, விலகுவதாக அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், '' ஏழு ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்தேன். எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை. கட்சி பணம் கையாடல் குறித்து, பலமுறை தலைமைக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. மாநில ஒருங்கிணைப்பாளர்களின் நடவடிக்கை, செயல்பாடு சரியில்லாத காரணத்தால் கட்சியில் இருந்து விலகுகிறேன். எங்களுடன், 100க்கும் மேற்பட்டோர் விலகி விட்டனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ